சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.58 லட்சத்தில் தள்ளுவண்டிகள்

வேதாரண்யம் நகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.58 லட்சத்தில் தள்ளுவண்டிகள் வழங்கப்படும் என நகர்மன்ற தலைவர் கூறினார்.;

Update: 2022-07-04 14:13 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.58 லட்சத்தில் தள்ளுவண்டிகள் வழங்கப்படும் என நகர்மன்ற தலைவர் கூறினார்.

நகர்மன்ற கூட்டம்

வேதாரண்யம் நகர்மன்ற கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமை தாங்கினார். நகர்மன்ற துணைத் தலைவர் மங்களநாயகி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹிம், சுகாதார ஆய்வாளர் ராமையன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் புகழேந்தி கூறியதாவது:-

ரூ.58 லட்சத்தில் தள்ளுவண்டிகள்

வேதாரண்யம் நகராட்சி பகுதியில் தீன் தயாள் அந்தியோதயா போஜனா தேசிய நகர்ப்புற வாழ்வாதார முகமை நகர்ப்புற திட்டத்தில் 31 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் தள்ளு வண்டிகள் வழங்கப்படும். கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும்.இவ்வாறு அவர் கூறினார். நகர்மன்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்