முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் முதன் முறையாக குன்னூர் வருகை

நாட்டின் 2-வதாக பொறுப்பேற்ற முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் குன்னூருக்கு வருகை தந்தார். அவர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Update: 2022-12-05 18:45 GMT

குன்னூர், 

நாட்டின் 2-வதாக பொறுப்பேற்ற முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் குன்னூருக்கு வருகை தந்தார். அவர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

முப்படை தளபதி வருகை

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் இந்தியா மற்றும் நமது நட்பு நாடுகளின் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் ராணுவ பயிற்சி மட்டுமின்றி குதிரை ஏற்ற பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் அருகே வெலிங்டன் எம்.ஆர்.சி. ராணுவ மையத்துக்கு வந்தார்.

ஜிம்கானா மைதானத்தில், அவரை ராணுவ பயிற்சி கல்லூரி முதல்வர் கமாண்டென்ட் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் வரவேற்றார்.

படைகளை வலுப்படுத்தும் முயற்சி

அதன் பின்னர் ராணுவ கல்லூரியில் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், பயிற்சி பெற்று வரும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி ஆலோசனை நடத்தினார்.

அப்போது வேகமாக மாறிவரும் சூழலில் நிறுவன தேவைகளை பூர்த்தி செய்ய மாணவர் அலுவலர்களை தயார்படுத்துவதற்காக கல்லூரியின் பல்வேறு முயற்சிகள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டது. கல்லூரியின் பல்வேறு பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பின் திட்டமிடப்பட்ட மேம்படுத்துதல் குறித்து வீரேந்திர வாட்ஸ் விளக்கினார்.

இதை தொடர்ந்து பயிற்சி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களிடம், முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், தேசிய பாதுகாப்புக்கான சவால்கள் குறித்தும், ஆயுத படைகளை வலுப்படுத்துவதற்கான அரசின் முயற்சிகள் குறித்தும் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். பின்னர் அவருடன் ராணுவ அதிகாரிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். நாட்டின் 2-வது முப்படை தலைமை தளபதியாக பொறுப்பேற்று உள்ள அனில் சவுகான் முதல் முறையாக குன்னூருக்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்