அரகண்டநல்லூரில்ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் முப்பெரும் விழா
அரகண்டநல்லூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் பேரூராட்சியில் செயல்பட்டு வரும் பொட்டமேடு பகுதி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆண்டு விழா, மாணவர் சேர்க்கை மற்றும் பாராட்டு விழா என்று முப்பெரும் விழா நடைபெற்றது.
இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் பானுமதி, மேற்பார்வையாளர் தமிழரசு, உதவி ஆசிரியர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி வரவேற்றார்.
விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ராயல் எஸ்.அன்பு பரிசுகளை வழங்கினார். இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் வேம்புஆறுமுகம், மேலாண்மை குழுவை சேர்ந்த ஜெயலட்சுமி மற்றும் குணசேகரன், தினகரன், காமராஜ், அய்யப்பன், புஷ்பராஜ் மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.