அரசு கல்லூரியில் முப்பெரும் விழா

மணல்மேடு அரசு கல்லூரியில் முப்பெரும் விழா நடந்தது.

Update: 2023-04-14 18:45 GMT

மணல்மேடு:

மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கணினி அறிவியல் துறை பேராசிரியர் கண்ணன் வரவேற்றார். மணல்மேடு பேரூராட்சித்தலைவர் கண்மணி அறிவுவடிவழகன் கலந்துகொண்டு பேசினார். இதில் அண்ணாமலை பல்கலைக்கழக விளையாட்டு துறை பேராசிரியர் முத்து இலக்குவன், மணல்மேடு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் கலந்து கொண்டனர். விழாவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற ாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர். குணசேகரன் கலந்து கொண்டு பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்