கேரளாவுக்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

புதுக்கடை அருகே நடந்த சோதனையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசியை வருவாய்த்துறையினர் ஒரு கி.மீ. தூரம் வாகனத்தை விரட்டி சென்று மடக்கி பறிமுதல் செய்தனர்.

Update: 2022-10-15 18:45 GMT

புதுக்கடை, 

புதுக்கடை அருகே நடந்த சோதனையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசியை வருவாய்த்துறையினர் ஒரு கி.மீ. தூரம் வாகனத்தை விரட்டி சென்று மடக்கி பறிமுதல் செய்தனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

கடத்தல்

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் இலவச அரிசி குமரி மாவட்டம் வழியாக அண்டை மாநிலமான ேகரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது. அதை தடுக்க வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலர் வேணுகோபால் தலைமையில் வருவாய்த்துறையினர் நேற்று முன்தினம் இரவு புதுக்கடை அருகே உள்ள மாங்கரை பகுதியில் வாகன சோதனை நடத்தினார்கள்.

10 டன் ரேஷன் அரிசி

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வாகனத்தை நிறுத்தும்படி அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் டிரைவர் நிறுத்தாமல் ஓட்டி சென்றார். உடனே வருவாய்த்துறையினர் அந்த வாகனத்தை ஒரு கி.மீ. தூரம் விரட்டி சென்று சடையன்குழி பகுதியில் மடக்கி பிடித்தனர். அப்போது டிரைவர்் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

வாகனத்தில் அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் 10 டன் ரேஷன் அரிசி இருந்தது. அதை கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது. அந்த அரிசியை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து காப்புக்காடு குடோனில் ஒப்படைத்தனர். வாகனம் கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் நிறுத்தப்பட்டது.

இந்த ரேஷன் அரிசியை கடத்்தியது யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்