மோட்டார் சைக்கிளை திருடிய திருச்சி வாலிபர் போலீசில் ஒப்படைப்பு

மோட்டார் சைக்கிளை திருடிய திருச்சி வாலிபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.;

Update: 2022-07-29 19:01 GMT

விராலிமலையில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. நேற்று காலை ஆம்புலன்ஸ் உரிமையாளர் மதிகுமார் தனது மோட்டார் சைக்கிளை கடையின் முன்பு நிறுத்திவிட்டு மற்றொரு பணிக்காக ஆம்புலன்சில் வெளியே சென்று விட்டு மீண்டும் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலைக்கு ெசன்று கொண்டிருந்தார். அப்போது எதிரே இவரது மோட்டார் சைக்கிளை வாலிபர் ஒருவர் ஓட்டி செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்த மதிகுமார் உடனே ஆம்புலன்சை திருப்பி அந்த வாலிபரை துரத்திசென்று மடக்கி பிடித்துள்ளார். பின்பு அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை விராலிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம் புத்தாநத்தத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 22) என்பது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்