திருச்சியில் இருந்து சென்னைக்கு சிறப்பு மெமு ரெயில் இன்று இரவு இயக்கம்

திருச்சியில் இருந்து சென்னைக்கு சிறப்பு மெமு ரெயில் இன்று இரவு இயக்கப்படுகிறது.

Update: 2024-05-26 10:18 GMT

திருச்சி,

விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) பயணிகள் அதிகமானோர் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். கூட்ட நெரிசலை சமாளிக்க தென்னக ரெயில்வே திருச்சி கோட்டம் சார்பில் திருச்சியில் இருந்து சென்னை தாம்பரத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு மெமு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த ரெயில் திருச்சியில் இன்று இரவு 11 மணிக்கு புறப்பட்டு தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்னை தாம்பரத்தை நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 6.05 மணிக்கு சென்றடையும். எனவே இந்த ரெயிலை பயணிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்