திருச்சி: சிறப்பாக கொண்டாடப்பட்ட கோவில் யானை ஆண்டாளின் பிறந்தநாள்

ஆண்டாள் யானைக்கு கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பல்வேறு வகையான பழங்களைக் கொடுத்து மகிழ்ந்தனர்.;

Update:2023-03-01 06:21 IST

திருச்சி,

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சாமி கோவில் யானை ஆண்டாளின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆண்டாள் யானை தனது 45-வது வயதை எட்டிய நிலையில், ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் யானைக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

அப்போது ஆண்டாள் யானைக்கு கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பல்வேறு வகையான பழங்களைக் கொடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து ஆண்டாள் பக்தர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கியது அனைவரையும் கவர்ந்தது.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்