திருச்சி சிவா எம்.பி. வீடு புகுந்து தாக்குதலில் கைது: ஜாமீன் பெற்ற 5 பேர், மதுரை போலீஸ் நிலையத்தில் கையெழுத்து

திருச்சி சிவா எம்.பி. வீடு புகுந்து தாக்குதலில் கைதான ஜாமீன் பெற்ற 5 பேர், மதுரை போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டனர்

Update: 2023-03-29 22:13 GMT


திருச்சியில் சில தினங்களுக்கு முன்பு எம்.பி. சிவாவின் வீடு புகுந்து சிலர் தாக்கிய சம்பவத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களான கவுன்சிலர்கள் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் ஜாமீன் கேட்டு திருச்சி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். மதுரை தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் மாலை 5 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கோர்ட்டு அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது.. அதன்படி, சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அவர்கள் நேற்று மாலை மதுரை வந்து, தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். கவுன்சிலர் விஜய், முத்துசெல்வம், ராமதாஸ் உள்ளிட்ட 5 பேர், போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டனர். அவர்களுடன் மதுரையை சேர்ந்த சிலரும் வந்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்