திருச்சி கே.கே. நகர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
திருச்சி கே.கே. நகர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.;
கே. சாத்தனூா் துணைமின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி கே.கே.நகர், இந்தியன் பேங்க் காலனி, காஜாமலை காலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ.காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர் நகர், அய்யப்ப நகர், எல்.ஐ.சி. காலனி, பழனி நகர், முல்லை நகர், ஓலையூர், இச்சிகாமாலைப்பட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி, ஆர்.வி.எஸ். நகர், வயர்ெலஸ் ரோடு, செம்பட்டு பகுதி, குடித்தெரு, பாரதி நகர், காமராஜ் நகர், ஜே.ஜே.நகர், சுந்தோஷ் நகர், ஆனந்த் நகர், கே.சாத்தனூர், வடுகப்பட்டி, பாரிநகர், காஜாநகர், ஆர்.எஸ் புரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை திருச்சி செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.