திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆய்வு
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.
தா.பேட்டை ஒன்றியம் ஆராய்ச்சி கிராமத்தில் சமத்துவபுரத்தில் உள்ள சில குடியிருப்பு வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், அதை மராமத்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆராய்ச்சியில் உள்ள சமத்துவபுரத்தை திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிச்சை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பல வீடுகள் பூட்டி கிடந்தன. பயனாளிகள் குடியிருக்காமல் இருக்கும் வீடுகளையும், வாடகைக்கு விட்டவர்களின் வீடுகளையும் கண்டறிந்து அவர்களை உடனடியாக வெளியேற்றி புதிய பயனாளிகளுக்கு வீடுகளை வழங்குமாறும், சேதமடைந்த வீடுகளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டார். ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ஆர்.மனோகரன், ஆர்.பி.குணசேகரன், ஒன்றிய பொறியாளர்கள், ஒன்றிய அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.