யானை தந்தத்தை விற்க முயன்ற வழக்கில் திருச்சி ஆட்டோ டிரைவர் கைது

யானை தந்தத்தை விற்க முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவர் திருச்சியில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-07 20:07 GMT

தர்மபுரியில் கடந்த 2021-ம் ஆண்டு யானையை கொன்று 2 தந்தங்களை விற்க முயன்றதாக 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். இதில், அவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 12 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த திருச்சி மணப்பாறை தாலுகா சுக்கம்பட்டியை ேசர்ந்த ஆட்டோ டிரைவர் கந்தசாமி (வயது 48) என்பவர் திருச்சி வீரப்பூர் அருகே உள்ள அரசு பள்ளி பகுதியில் சுற்றித்திரிவதாக திருச்சி வனத்துறையினருக்கு தர்மபுரி மாவட்ட வனத்துறையினர் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருச்சி வனச்சரகர் நவீன் குமார் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் அங்குள்ள டீக்கடை முன்பு கந்தசாமியை சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் அவர் தர்மபுரி மாவட்ட வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்