வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி
கார்கில் போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கார்கில் போரில் வெற்றி பெற்றதின் நினைவாக ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ந்தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் கரூர் மனோகரா கார்னர் ரவுண்டானா அருகே மாவட்ட முன்னாள் முப்படை ராணுவ வீரர்கள் நலச்சங்கம் சார்பில் கார்கில் போரில் வீரமரணமடைந்த வீரர்கள் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தலைவர் முருகேசன், செயலாளர் உலகநாதன், பொருளாளர் நல்லுசாமி உள்பட முன்னாள் முப்படை ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.