பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி

கள்ளக்குறிச்சியில் பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2023-04-17 18:45 GMT

கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியின் போது உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் சரவணன் தலைமை தாங்கி பணியின் போது உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் உதவி மாவட்ட அலுவலர் சிவக்குமார், நிலைய அலுவலர்கள் ஜெயேந்திரன், நாகேஸ்வரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்