ராமநாதபுரம் மாவட்ட பா.ஜனதாவினர் அஞ்சலி

பிரதமர் நரேந்திரமோடி தாயார் மறைவையொட்டி அவரது உருவப்படத்துக்கு ராமநாதபுரம் மாவட்ட பா.ஜனதாவினர் அஞ்சலி செலுத்தினர்.

Update: 2022-12-30 18:45 GMT

பனைக்குளம்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் (வயது100) நேற்று அதிகாலையில் காலமானார். இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் பா.ஜனதா கட்சியினர் பல்வேறு பகுதிகளிலும் அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தினார்கள்.இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக புதிய பஸ் நிலையம் அருகே மாவட்ட தலைவர் இ.எம்.டி.கதிரவன் கலந்து கொண்டு பாரத பிரதமரின் தாயார் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா பிரமுகரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான சண்முகநாதன், மாவட்ட துணைத்தலைவர் அழகர்சாமி, பா.ஜனதா வெளிநாடு வாழ் தமிழ் மக்கள் பிரிவு மாவட்ட தலைவர் சரண்யன், மண்டபம் ஒன்றிய செயலாளர் இளசு என்ற இளையராஜா, ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் சேதுபதி, திருவாடானை மேற்கு ஒன்றிய தலைவர் பிரபு உள்ளிட்டவர்களுடன் பா.ஜனதா தொண்டர்களும் கலந்து கொண்டு மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்