குமரி பாலன் நினைவிடத்தில் அஞ்சலி

நினைவு தினத்தையொட்டி குமாி பாலன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2023-08-08 20:21 GMT

தக்கலை:

நினைவு தினத்தையொட்டி குமாி பாலன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

குமரி பாலன் நினைவு தினம்

சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் 1993-ல் நடந்த பயங்கரவாத குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் குமரி பாலன். இந்து முன்னணி அமைப்பின் இணை அமைப்பாளராக பணியாற்றி வந்த இவரின் நினைவிடம் அவரின் சொந்த ஊரான குமரி மாவட்டம் தக்கலைக்கு அருகில் உள்ள பிரம்மபுரத்தில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடக்கும் அவரின் நினைவு தினத்தை பயங்கரவாத எதிர்ப்பு தினமாக இந்து முன்னணி சார்பில் கடைபிடிக்கப்படுகிறது. அந்தவகையில் குமரி பாலனின் நினைவு தினத்தையொட்டி நேற்று காலையில் குமரி மாவட்ட இந்து முன்னணி சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு தின மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது.

நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்தும், தக்கலை அருகே உள்ள காட்டாத்துறையில் இருந்தும் தொடங்கிய மோட்டார் சைக்கிள் பேரணியானது குமரி பாலன் நினைவிடம் வந்தது. பின்னர் அங்கு பஜனை, பொதுக்கூட்டம், பிரார்த்தனை, மலர் அஞ்சலி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

மலர் அஞ்சலி

பயங்கரவாத எதிர்ப்புதின பொதுக்கூட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார், இதில் குமரி பாலனோடு பணியாற்றிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து குமரி பாலன் நினைவிடத்தில் பொன்.ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி மாநில அமைப்பாளர் முருகானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதம், பா.ஜ.க. மாவட்ட தலைவர் தர்மராஜ், பாடகர் சிவசந்திரன், இந்து முன்னணி நிர்வாகிகள் கனல் கண்ணன், மிசா சோமன், அரசு ராஜா உட்பட பலர் மலரஞ்சலி செலுத்தினார்கள் பா.ஜ.க. மாவட்ட பொருளாளர் முத்துராமன், மாநில செயலாளர் மீனாதேவ் இந்து அமைப்பினர் திரளாக கலந்துகொண்டனர், முடிவில் குமரி பாலனின் சகோதரர் குமரி ப.ரமேஷ் நன்றி கூறினார்.

திங்கள்சந்தை

இதே போல, குமரி மாவட்ட இந்து முன்னணி சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து குமாரகோவில் பகுதியில் உள்ள குமரி பாலன் நினைவிடத்திற்கு ஊர்வலம் நடைபெற்றது.

குருந்தன்கோடு ஒன்றிய இந்து முன்னணி சார்பில் திங்கள்சந்தை ராதாகிருஷ்ணன் கோவில் அருகே இருந்து ஊர்வலம் நடந்தது.

அதைதொடர்ந்து இருசக்கர வாகன பேரணி தொடக்க நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரவீந்திரன், முருகன், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேரணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் மிசாசோமன், நெல்லை கோட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் உட்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்