திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி

திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கலந்துகொண்டார்.

Update: 2023-10-21 18:45 GMT

திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கலந்துகொண்டார்.

போலீசார் நீத்தார் நினைவு தினம்

இந்தியா- சீனா எல்லை பகுதியில் 1959-ம் ஆண்டு நடந்த மோதலில் எல்லை பாதுகாப்பில் ஈடுபட்ட 20 இந்திய காவலர்கள் மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை நினைவுக்கூரும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந் தேதி போலீசார் நீத்தார் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி அக்டோபர் 21-ந்் தேதி திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பாக திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் காவலர்கள் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

மலர் தூவி வீரவணக்கம்

நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உயிர்நீத்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார். அப்போது போலீசார் வானத்தை நோக்கி குண்டுகள் முழங்கினர். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (தலைமையிடம்) ஈஸ்வரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜா, ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் இளங்கிள்ளிவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்