பழங்குடியின மக்கள் குலதெய்வ வழிபாடு

பழங்குடியின மக்கள் குலதெய்வ வழிபாடு

Update: 2023-05-27 19:00 GMT

பந்தலூர்

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பொன்னானி அருகே உள்ள சர்க்கரை குளம் பகுதியில் வசிக்கும் பழங்குடியினரின் குலதெய்வ வழிபாடு நடைபெற்றது. இதில் வாழ்க்கை வளம் பெறவும், விவசாயம் செழிக்கவும், குழந்தைகளின் கல்வி மேம்படவும், மழை வேண்டியும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பூஜையில் பழங்குடியினர்கள் 5 பேர் அருள்வாக்கு கூறினர். பக்தர்கள் தேங்காய் உள்ளிட்ட காணிக்கைகளை செலுத்தினர். இதையொட்டி பழங்குடியினார்கள் பாரம்பரிய இசைக்கருவிகளுடன் நடனமாடி கொண்டாடினார்கள். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பழங்குடியினர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்