மூலிகை தாவரப்பண்ணை அமைக்க பழங்குடியின மக்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஷ்ரவன் குமார் தகவல்

மூலிகை தாவரப்பண்ணை அமைக்க பழங்குடியின மக்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-03 19:00 GMT

தியாகதுருகம்,

கல்வராயன்மலை வட்டத்தில் உள்ள பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில் 2022-2023-ம் நிதியாண்டிற்கு விரிவான பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மலர் வளர்ப்பு, நாற்றங்கால் மேலாண்மை, மூலிகை தாவரப்பண்ணை, தேன் வளர்ப்பு மற்றும் கறவை மாடுகள் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்திட நிதி ஒப்பளிப்பு செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

அதன்படி இந்த திட்டங்களில் பயன்பெற பழங்குடியின மக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய புகைப்படம், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகிய விவரங்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரரின் செல்போன் எண் மற்றும் சரியான முகவரியையும் குறிப்பிட்டு திட்ட அலுவலர், பழங்குடியினர் நலம், தாலுகா அலுவலக வளாகம், கள்ளக்குறிச்சி- 606202 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைத்து பயன்பெறலாம். மேற்கண்ட தகவல் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்