தீக்கிரையான பசுமை போர்த்திய மரங்கள்

கரூர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையோரத்தில் தீ வைத்ததில் பசுமையான மரங்கள் கருகி காட்சி அளிக்கின்றன.

Update: 2023-08-29 19:45 GMT

வேடசந்தூர் அருகே உள்ளது லட்சுமணன்பட்டி நால்ரோடு. அங்குள்ள நிலம் ஒன்றில் வளர்ந்திருந்த கருவேல மரங்கள், சமீபத்தில் வெட்டி அகற்றப்பட்டு கரூர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையோரத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த சாலையோரத்தில் பசுமை போர்த்திய நிழல் தரும் மரங்களும் இருந்தன. தற்போது கருவேல மரங்கள் காய்ந்து விட்டன. அதில் மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர். சிறிதுநேரத்தில் மள, மளவென தீ பரவியது. அதில் இருந்து பரவிய தீ, சாலையோரத்தில் நின்ற மரங்களின் மீதும் தொற்றிக்கொண்டது. இதனால் அந்த மரங்களும் தீக்கிரையாகின. பசுமைபோர்த்திய மரங்கள், சிறிதுநேரத்தில் தீயில் கருகி பரிதாபமாக காட்சி அளித்தன.

மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்று வீதிக்கு வீதி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளும் நிலையில், சாலையோரத்தில் உள்ள மரங்களை காப்பாற்ற முடியவில்லையே என்ற ஏக்கம் காண்போரை வேதனைப்பட வைத்தது என்றே சொல்லலாம். எனவே மரங்கள் தீயில் கருக காரணமாக இருந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்