சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக கிடக்கும் மரக்கிளைகள்

வெட்டப்பட்ட மரக்கிளைகள் பல நாட்களாக சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கிடக்கிறது.;

Update: 2023-07-16 17:11 GMT

காங்கயம் அருகே சிவன்மலை - கல்லேரி செல்லும் சாலையில் தினசரி இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் உள்ளிட்ட எண்ணற்ற வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் இந்த சாலை ஓரத்தில் புதிதாக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு மின்கம்பிகள் கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்றது. அப்போது மின்கம்பிகள் செல்லும் பாதையில் இடையூறாக உள்ள சாலை ஓரத்தில் இருந்த வேப்பமரத்தின் மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டது.

இந்த நிலையில் வெட்டப்பட்ட மரக்கிளைகள் பல நாட்களாக சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கனரக வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சாலையில் கிடக்கிறது.

எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக போக்குவரத்திற்கு இடையூறாக கிடக்கும் மரக்கிளைகளை அப்புறப்படுத்தி சீரான வாகன போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்