பொது சுகாதாரத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா

வாணியம்பாடியில் பொது சுகாதாரத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

Update: 2022-09-24 18:45 GMT

வாணியம்பாடி

வாணியம்பாடியில் பொது சுகாதாரத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

வாணியம்பாடியில் உள்ள நியூடவுன் பகுதியில் நேற்று பொது சுகாதார துறை நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக திருப்பத்தூர் மாவட்ட சுகபாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் டி.ஆர்.செந்தில், நகராட்சி ஆணையாளர் மாரிச்செல்வி கலந்து கொண்டு நகராட்சி பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

நிகழ்ச்சியில் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ச.பசுபதி, நகர மன்ற உறுப்பினர்கள் கலைச்செல்வன், தவுலத் மற்றும் சுகாதார பணியாளர்கள், நகராட்சி பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்