வேலூர் வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா

ேவலூர் வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

Update: 2022-07-22 18:10 GMT

வேலூர்

ேவலூர் வெங்கடேஸ்வரா கல்லூரி சார்பில் மரக்கன்றுகள் நடந்தன.

வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி, கல்லூரியின் நாட்டு நலப்பணி மற்றும் வேலூர் எச்.டி.எப்.சி. வங்கி இணைந்து பசுமையான முயற்சிக்கு செல்லுங்கள் எனும் தலைப்பில் மரக்கன்று நடும் விழாவை கல்லூரியில் நடத்தியது.

கல்லூரி தலைவர் என்.ரமேஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் என்.ஜனார்த்தனன் முன்னிலை வகித்தார். விழாவுக்கு வந்த அனைவரையும் முதல்வர் டாக்டர் எம்.ஞானசேகரன் வரவேற்றார். எச்.டி.எப்.சி. வங்கியை சேர்ந்த சரவணன், சீனிவாசன், தினகரன், வசந்தகுமார் மற்றும் வினோத்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.

வங்கியின் பசுமையான முயற்சிக்கு செல்லுங்கள் என்பதன் மூலம் மாணவர்களுக்கு மரங்கள் வளர்ப்பது பற்றியும், மரங்களின் இன்றியமையாத தேவைகளை பற்றியும் வங்கி அதிகாரி செந்தில்குமார் எடுத்துக் கூறினார்.

ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் ஏ.குமரேசன் செய்திருந்தார்.

----

2 காலம்.

Tags:    

மேலும் செய்திகள்