பொத்தரை கிராமத்தில் 200 கால்நடைகளுக்கு சிகிச்சை
பொத்தரை கிராமத்தில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் 200 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கண்ணமங்கலம்
பொத்தரை கிராமத்தில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் 200 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சந்தவாசல் அருகே உள்ள பொத்தரை கிராமத்தில் கேளூர் கால்நடை மருத்துவமனை சார்பில் கால்நடைகளுக்கு மலடு நீக்க சிகிச்சை முகாம் நடைபெற்றது. இம்முகாமை கால்நடை நோய் புலனாய்வு உதவி இயக்குனர் ராமன் தொடங்கி வைத்தார். கேளூர் கால்நடை மருத்துவர் சாரங்கபாணி மற்றும் குழுவினர் கலந்து கொண்டு, 50 பசுக்களுக்கு மலடு நீக்க சிகிச்சை, 70 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், 13 கால்நடைகளுக்கு டிபி நோய் சிகிச்சை அளித்தனர். மேலும் 34 கால்நடைகளுக்கு தாது உப்பு பாக்கெட்டுகள் வழங்கப்பட்டதோடு 200 கால்நடைகளுக்கு தடுப்பூசி உள்பட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.