தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதி
ரவணசமுத்திரம் ரெயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதியடைந்தனர்.
கடையம்:
கடையம் அருகே ரவணசமுத்திரம் ெரயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக நேற்று முன்தினம் இரவில் இருந்தே பயணிகள் காத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் பணிக்கு வந்த ரெயில் நிலைய அலுவலர், இணையதள இணைப்பு இல்லாததால் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்று கூறினார். இதனால் இரவு முழுவதும் காத்திருந்த பயணிகள் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதால் அவதியடைந்தனர்.