போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-06-21 17:15 GMT

ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் நலச்சங்கம் சார்பில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் ராஜாராம் பாண்டியன் தலைமை தாங்கினார். செயலாளர் விஜயபாண்டியன், பொருளாளர் அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் சாத்தையா கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், கடந்த 77 மாதங்களாக வழங்காமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், 2016 முதல் வழங்கப்படாமல் உள்ள பஞ்சப்படியை உடனடியாக வழங்க வேண்டும். கடந்த 2010-ஆம் ஆண்டுக்கு பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு இதுவரை வழங்காமல் உள்ள 7-வது ஊதியக்குழு பரிந்துரையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்