கிரானைட் கல் கடத்தல்; லாரி பறிமுதல்

கிரானைட் கல் கடத்தி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-06-30 17:04 GMT

கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவள உதவி இயக்குனர் சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் கடந்த 28-ந் தேதி இரவில் கோனேகவுண்டனூர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கோனேகவுண்டனூர் ஏரி அருகே நின்ற லாரியை சோதனையிட்டதில் கிரானைட் கல் கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் கிரானைட் கல்லுடன் நின்ற லாரியை மகராஜகடை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்