போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-13 18:45 GMT

நாகை அரசு விரைவு போக்குவரத்து கழகம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பணி மனை தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். பணிமனை செயலாளர் மனோகர், மத்திய சங்க செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், பொருளாளர் அந்துவன் சேரல், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தங்கமணி, மாவட்ட குழு உறுப்பினர் மணி ஆகியோர் பேசினர்.போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவர், கண்டக்டர்களை நியமிக்க கூடாது. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உடனடி பணபலன்களை வழங்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தீபாவளி போனஸ் விரைவாக வழங்க வேண்டும். தொழிலாளர் விரோத போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்