விபத்தில் காயமடைந்த போக்குவரத்து ஊழியர் சாவு

விபத்தில் காயமடைந்த போக்குவரத்து ஊழியர் சாவு

Update: 2022-09-24 22:45 GMT

புதுக்கடை:

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு கண்ணன்கரையை சேர்ந்தவர் ஜோசப்ராஜ் (வயது52). இவர் மார்த்தாண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வெள்ளையம்பலம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒருவர் சாலையில் குறுக்கே பாய்ந்தார். இதனால், மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி ஜோசப்ராஜ் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அருகில் நின்றவர்கள் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஜோசப் ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை இன்ஸ்பெக்டர் ஜேசு ராஜசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்