போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யு.சி.யினர் ஆர்ப்பாட்டம்
14-வது ஊதிய ஒப்பந்தத்தை வலியுறுத்தி போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யு.சி.யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
14-வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வலியுறுத்தி திருமாநிலையூரில் உள்ள பணிமனை முன்பு கரூர் மண்டல ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில துணைத்தலைவர் (சம்மேளனம்) செல்வராஜ் தலைமை தாங்கினார். மண்டல பொதுச்செயலாளர் விஜயகுமார், மாநில நிர்வாகக்குழு (சம்மேளனம்) செந்தில்குமார், மண்டல துணைதலைவர் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.