வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு

வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு;

Update: 2023-01-16 10:42 GMT

பெருமாநல்லூர்

சாலை பாதுகாப்பு வார விழா கடந்த 11-ந்தேதி முதல் வருகிற 17-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் ஒரு வழிப்பாதையில் எதிர் திசையில் வருபவர்களை அவினாசி வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கர் தலைமையில் திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் தங்கராஜ் மற்றும் பெருமாநல்லூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சச்சிதானந்தம், போலீசார் கொண்ட குழுவினர் சோதனை செய்து அவர்களுக்கு சாலை விதிகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் எதிர் திசையில் வந்த 10-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு ரூ.20 ஆயிரம் வரை அபராதமும் விதித்தனர்.

---------

Tags:    

மேலும் செய்திகள்