வீடு புகுந்து கணவன்-மனைவிமீது தாக்குதல் நடத்திய திருநங்கைகள்

வீடு புகுந்து கணவன்-மனைவிமீது தாக்குதல் நடத்திய திருநங்கைகள்

Update: 2023-01-17 18:45 GMT

கோவை

வீடு புகுந்து கணவன்-மனைவியை தாக்கி, ஆடைகளை களைந்து தகராறில் ஈடுபட்ட திருநங்கைகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீசில் கூறியதாவது:-

வீடு புகுந்து தாக்குதல்

கோவை புலியகுளம் அந்தோணியார் கோவில் வீதியை சே்ரந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி கவுசிகா. அந்த பகுதியில் குடியிருக்கும் 17 வயது திருநங்கை ஒருவருக்கும். இவர்களுக்கும் இடையே இருசக்கர வாகனங்களை நிறுத்துவதில் தகராறு இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் அந்த திருநங்கை, தன்னுடைய தோழிகளான ஷாமிலி, திட்சயா, யாசினி, மவுனிகா, இந்துஜா ஆகியோரை அழைத்துக்கொண்டு வந்து வீடு புகுந்து செல்வராஜையும், அவருடைய மனைவி கவுசிகாவையும் கைகள் மற்றும் சுத்தியலால் தாக்கி உள்ளனர்.

ஆடைகளை களைந்து கொடுமை

இதனால் 2 பேரும் காயம் அடைந்து கூச்சல் போட்டனர். ஆடைகளை களைந்து செல்போனையும் பறித்துள்ளனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தபோது 6 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. காயம் அடைந்த கணவன்-மனைவி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து புலியகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து திருநங்கைகள் 6 பேரையும் கைது செய்தனர். இதில்ஒரு திருநங்கை 17 வயது என்பதால் சிறுவர் சீர்திருத்த மையத்தில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.திருநங்கைகள் தாக்குதல் நடத்திய சம்பவம் புலியகுளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்