சென்னையில் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி... புனேவை சேர்ந்த திருநங்கைக்கு அழகி பட்டம்

சென்னை சேத்துப்பட்டில் திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி நடைபெற்றது.;

Update: 2022-10-09 09:20 GMT

சென்னை,

சென்னை சேத்துப்பட்டில் திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருநங்கைகள் கலந்துக் கொண்டு, தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

அழகிகளுக்கு அறிவு மற்றும் திறமை சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டன. புனேவை சேர்ந்த நிரஞ்சனா என்வருக்கு 2022-ம் ஆண்டுக்கான சிறந்த அழகி பட்டமும், தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.

பட்டம் வழங்கி பேசிய எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், தற்போதைய திமுக அரசு, திருநங்கைகளுக்கு அனைத்து நலன்களையும் செய்து வருவதாக தெரிவித்தார்.

 

Tags:    

மேலும் செய்திகள்