முத்தையாபுரத்தில் டிரான்ஸ்பார்மரில் தீ விபத்து
முத்தையாபுரத்தில் டிரான்ஸ்பார்மரில் தீவிபத்து ஏற்பட்டது.;
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகே முத்தையாபுரம், மெயின் ரோட்டில் உள்ள டிரான்ஸ்பார்மரில் நேற்று முன்தினம் இரவு 11.30் மணியளவில் ஆயில் கசிவு ஏற்பட்டு திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்த உடன் தூத்துக்குடி தெர்மல் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் தீவிபத்து தவிர்க்கப்பட்டது.