விழுப்புரம் மாவட்டத்தில்22 சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
விழுப்புரம் மாவட்டத்தில் 22 சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்ராஜ் விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்திற்கும், தயாளு அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்திற்கும், நாகராஜன் ஆரோவில் போலீஸ் நிலையத்திற்கும், செல்வக்குமார் கண்டமங்கலம் போலீஸ் நிலையத்திற்கும், ஸ்ரீபால் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கும், சம்பத்குமார் திண்டிவனத்திற்கும், கஜேந்திரன் செஞ்சிக்கும், ராமலிங்கம் வானூருக்கும், முத்துக்குமரன் திருவெண்ணைநல்லூருக்கும், மதிவாணன் காணைக்கும் இவர்கள் உள்பட மொத்தம் 22 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மாவட்டத்திற்குள் வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பிறப்பித்துள்ளார்.