தாசில்தார்கள் பணியிட மாற்றம்

தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-07-06 19:58 GMT


மாவட்டத்தில் 4 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- சிவகாசி நில எடுப்பு மற்றும் மேலாண்மை அலகு-2 தனி தாசில்தார் சுப்பிரமணியம், காரியாபட்டி தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராஜபாளையம் குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தார் செந்தில்குமார் ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை-தூத்துக்குடி ெரயில் பாதை நில எடுப்பு தனி தாசில்தார் தன்ராஜ், ராஜபாளையம் குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் மகேஷ், மதுரை-தூத்துக்குடி ெரயில் பாதை நில எடுப்பு தனி தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்