பேரூராட்சி பணியாளர்கள் இடமாற்றம்

திசையன்விளை பேரூராட்சி பணியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Update: 2023-04-12 21:02 GMT

திசையன்விளை:

திசையன்விளை பேரூராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றிய அருண்லால், வரிதண்டலராக பணியாற்றிய அர்சுதன் ஆகியோர் மூலைக்கரைப்பட்டி பேரூராட்சிக்கும், வரிதண்டலராக பணியாற்றிய ரமேஷ் சேரன்மாதேவி பேரூராட்சிக்கும், சுகாதார மேற்பார்வையாளராக பணியாற்றிய ராமச்சந்திரன் வடக்கு வள்ளியூர்பேரூராட்சிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். பொருத்துனராக பணியாற்றிய முருகன், பணகுடி பேரூராட்சிக்கும், குடிநீர் மேல்நிலைத்தொட்டி காவலராக பணியாற்றிய கற்பக வினாயகம் பணகுடி பேரூராட்சிக்கும், பம்ப் ரூம் காவலர் சுடலைமுத்து நாங்குநேரி பேரூராட்சிக்கும் மாற்றப்பட்டனர். புகார் மற்றும் நிர்வாக நலன் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்