மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நீதிபதிகள் பணியிட மாற்றம்

மாவட்ட கோர்ட்டுகளில் பணியாற்றிய பல்வேறு நீதிபதிகள் மாற்றப்பட்டு உள்ளனர்.

Update: 2023-04-30 20:14 GMT


மாவட்ட கோர்ட்டுகளில் பணியாற்றிய பல்வேறு நீதிபதிகள் மாற்றப்பட்டு உள்ளனர்.

மாவட்ட முதன்மை நீதிபதிகள்

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் உள்ள கோர்ட்டுகளில் நீதிபதிகள் மாற்றம் குறித்த விவரம் வருமாறு:-

திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம், மதுரை மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி, சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், மதுரை தொழிலாளர் கோர்ட்டு நீதிபதி முத்துசாரதா, திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர், அரியலூர் மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், தேனி மகளிர் கோர்ட்டு நீதிபதி திலகம், விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதிசாய்பிரியா, கடலூர் குடும்பநல கோர்ட்டு நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி நாகலட்சுமி, திருச்சி மாவட்ட குடும்பநல கோர்ட்டு நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.

மதுரை 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ராதிகா, தஞ்சாவூர் கூடுதல் மாவட்ட (விரைவு கோர்ட்டு) நீதிபதியாகவும், நாகப்பட்டினம் லோக் அதாலத் தலைவர் நாகராஜன், மதுரை மாவட்ட மகளிர் கோர்ட்டு நீதிபதியாகவும், தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் நீதிபதி சண்முகவேல், மதுரை 4-வது மாவட்ட கூடுதல் நீதிபதியாகவும், மதுரை 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி சுபத்ரா, மதுரை 3-வது மாவட்ட நீதிபதியாகவும், மதுரை போக்சோ கோர்ட்டு நீதிபதி கிருபாகரன் மதுரம், 6-வது மாவட்ட கூடுதல் நீதிபதியாகவும், ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் நீதிபதி கஜரா ஜிஜி, ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கூடுதல் சார்பு நீதிபதிகள்

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பிரீத்தா, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிபதியாகவும், தென்காசி முதன்மை சார்பு நீதிபதி ருஸ்கின்ராஜ், மதுரை உசிலம்பட்டி சார்பு நீதிபதியாகவும், கள்ளக்குறிச்சி முதன்மை சார்பு நீதிபதியான வீரணன், தேவகோட்டை சார்பு நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் சார்பு நீதிபதி ஆஷா கவுசல்யா, நாகர்கோவில் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளராகவும், மதுரை முதலாவது கூடுதல் சார்பு நீதிபதியாக அகிலா தேவியும், மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் தீபா, திண்டுக்கல் மாவட்ட கூடுதல் சார்பு நீதிபதியாகவும், மதுரை 3-வது கூடுதல் சார்பு நீதிபதி பால்பாண்டியன், மதுரை 2-வது கூடுதல் சார்பு நீதிபதியாகவும்,

ஊழல் தடுப்பு கோர்ட்டு நீதிபதிகள்

திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பாரதிராஜா, மதுரை ஊழல் தடுப்பு கோர்ட்டு சிறப்பு நீதிபதியாகவும், நெல்லை மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு நீதிபதி செந்தில் முரளி, சிவங்கை மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு நீதிபதியாகவும், சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு உதவி நீதிபதி காமராஜ், மதுரை 3-வது கூடுதல் சார்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டனர்.

இந்த தகவலை ஐகோர்ட்டு பதிவாளர் வெளியிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்