சப்-இன்ஸ்பெக்டர்கள் 9 பேர் பணி இடமாற்றம்: போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
தேனி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் 9 பேரை பணியிடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
தேனி மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் 9 பேரை பணி இடமாற்றம் செய்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டுள்ளார். இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் விவரம் (அடைப்புக்குறிக்குள் தற்போது பணியாற்றும் இடம்) வருமாறு:-
தவசிராஜன் (வைகை அணை) நெடுஞ்சாலை ரோந்து பிரிவுக்கும், ஜோதிகண்ணன் (கண்டமனூர்) மயிலாடும்பாறைக்கும், சுல்தான்பாட்ஷா (பழனிசெட்டிபட்டி) ஆண்டிப்பட்டிக்கும், அல்போன்ஸ்ராஜா (நெடுஞ்சாலை ரோந்து) கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்துக்கும், தனிக்கொடி (கோம்பை) ஹைவேவிசுக்கும், மணிகண்டன் (தென்கரை) ஜெயமங்கலத்துக்கும், அழகுராஜா (ஜெயமங்கலம்) தென்கரைக்கும், பாக்கியம் (சைபர் கிரைம்) பழனிசெட்டிபட்டிக்கும், உமாதேவி (தேனி) சைபர் கிரைம் போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.