5 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி போளூர் தாசில்தார் சஜேஷ்பாபு திருவண்ணாமலை மாவட்ட இலங்கை தமிழர்கள் நலன் தனி தாசில்தாராகவும், அங்கிருந்த ஜெ.சுகுணா கீழ்பென்னாத்தூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.
கீழ்பென்னாத்தூர் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் எம்.வெங்கடேசன் போளூர் தாசில்தாராகவும், செங்கம் தாசில்தார் கே.ராஜேந்திரன் திருவண்ணாமலை வட்ட வழங்கல் தனி தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த பி.முருகன் செங்கம் தாசில்தாராகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.