5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால், தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டிற்கும், அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் வள்ளியூர் குற்றப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். வள்ளியூர் குற்றப்பிரிவில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சாந்தி, திசையன்விளை போலீஸ் நிலையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.
இதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி, தென்காசி மாவட்டம் புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், பணகுடி சரகத்தில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.
இதற்கான உத்தரவை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி.பிரவேஷ்குமார் பிறப்பித்துள்ளார்.