கேரள வனத்துறை அலுவலர் உள்பட 5 பேர் இடமாற்றம்

கேரள வனத்துறை அலுவலர் உள்பட 5 பேர் இடமாற்றம் செய்யப்பட்டதாக பேச்சுவார்த்தை கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது

Update: 2022-11-04 18:45 GMT

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் தலையணை பகுதிகளில் 43 பழங்குடியினர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்கள். கடந்த மாதம் 23-ந் தேதி இப்பகுதியில் வசித்து வரும் 2 பேர் வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர். அதில் கேரளா-தமிழ்நாடு வன எல்லை பகுதியில் கேரளா வனத்துறையினர் இந்தப் பகுதியில் யாருமே வரக்கூடாது என கண்டிப்பதாகவும் பெண் தோளில் வைத்திருந்த வன மகசூலை பிடித்து இழுத்து இங்கே வரக்கூடாது என்று கண்டித்தும், அவமானப்படுத்தியதாக தெரிவித்து இருந்தனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக வனத்துறையினர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதன்பின்னர் நேற்று முன்தினம் மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் சம்பந்தப்பட்ட வனப் பாதுகாப்பு அதிகாரி உள்பட 5 பேர் பணியிட இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர், என்று கேரளா வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்