4 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

நாகை மாவட்டத்தில் 4 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-07-20 19:00 GMT

நாகை மாவட்டத்தில் 4 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

பணியிட மாற்றம்

நாகை மாவட்டத்தில் உள்ள 4 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாகை தாசில்தாராக ராஜசேகரன் பணியாற்றி வந்தார். இவர் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அரசு கேபிள் டி.வி. தாசில்தாராக பணியாற்றிய மாரிமுத்து, நாகை ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தாராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்த பணியிடத்தில் இருந்த திலகா, கீழ்வேளூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாகை தாசில்தார்

கீழ்வேளூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக இருந்த ரமேஷ் குமார், நாகை தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான உத்தரவை நாகை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பிறப்பித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்