குமரியில் 3 தாசில்தார்கள் இடமாற்றம்
குமரியில் 3 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 3 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். அதாவது அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர், விளவங்கோடு தேசிய நெடுஞ்சாலை (நிலமெடுப்பு) தனி தாசில்தாராகவும், விளவங்கோடு தேசிய நெடுஞ்சாலை (நிலமெடுப்பு) தனி தாசில்தார் அனிதா குமாரி, கிள்ளியூர் தாசில்தாராகவும், கிள்ளியூர் தாசில்தார் ராஜேஷ் அகஸ்தீஸ்வரம் தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.