தமிழ்நாட்டில் 27 துணை கலெக்டர்கள் இடமாற்றம்-அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் 27 துணை கலெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-08-22 16:45 GMT

சென்னை,

தமிழகம் முழுவதும் 27 துணை கலெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் 3 பேர் மாற்றப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சி அடையார் தெற்கு வட்டார துணை கலெக்டர் (நிலம் மற்றும் உடைமை) கா.கண்ணப்பன் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (சென்னை மண்டலம்) சிறப்பு பறக்கும் படை துணை கலெக்டராக மாற்றப்படுகிறார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் துணை கலெக்டர்(நிலம்) கிருபா உஷா சென்னை கிண்டி தமிழ்நாடு சிறு தொழில் கழகத்தின் மேலாளராக(நிர்வாகம்) நியமிக்கப்படுகிறார். இது புதிய பணி இடம் ஆகும்.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (சென்னை மண்டலம்) சிறப்பு பறக்கும் படை துணை கலெக்டர் பெருமாள் சென்னை மாநகராட்சி அடையார் தெற்கு வட்டார துணை கலெக்டராக (நிலம் மற்றும் உடைமை) பொறுப்பு ஏற்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்