21 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 21 தாசில்தார்களை பணியிடமாற்றம் செய்து கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-08-25 18:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 21 தாசில்தார்களை பணியிடமாற்றம் செய்து கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

தாசில்தார்கள் நியமனம்

தேன்கனிக்கோட்டை தாசில்தார் குருநாதன், மாவட்ட வழங்கல் மற்றும் பாதுகாப்பு அலுவலக நேர்முக உதவியாளராகவும், போச்சம்பள்ளி தாசில்தார் பிரதாப், ஊத்தங்கரை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், கிருஷ்ணகிரி தாசில்தார் நீலமேகம், சூளகிரி சிப்காட் நிலை 3, அலகு 1 தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அஞ்செட்டி தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, சூளகிரி சிப்காட் நிலை 4, அலகு 1 தனி தாசில்தாராகவும், ஊத்தங்கரை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சம்பத், கிருஷ்ணகிரி தாசில்தாராகவும், ஓசூர் தேசிய நெடுஞ்சாலை 844 தனி தாசில்தார் (நிலம் எடுப்பு) சரவணமூர்த்தி, தேன்கனிக்கோட்டை தாசில்தாராகவும், சூளகிரி சிப்காட் அலகு-3, பகுதி-1 தனி தாசில்தார் (நிலம் எடுப்பு) திலகம், போச்சம்பள்ளி தாசில்தாராகவும், போச்சம்பள்ளி சமூக பாதுகாப்பு திட்டம் தனி தாசில்தார் அனிதா, சூளகிரி தாசில்தாராகவும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஓசூர்

ஓசூர் வட்டார அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தார் பாலாஜி, பதவி உயர்வு பெற்று சிப்காட் அலகு 2 தனி தாசில்தாராகவும் (நிலம் எடுப்பு), கலெக்டர் அலுவலக உதவி ஆணையர் (ஆயம்) "என்" பிரிவு தலைமை உதவியாளர் ஜெகதீஸ்குமார், பதவி உயர்வு பெற்று சிப்காட் அலகு 3 தனி தாசில்தாராகவும் (நிலம் எடுப்பு), கலெக்டர் அலுவலக "எம்" பிரிவு தலைமை உதவியாளர் பெரியண்ணன் பதவி உயர்வு பெற்று, ஓசூர் தேசிய நெடுஞ்சாலை 948ஏ, தனி மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதே போல ஓசூர் தேசிய நெடுஞ்சாலை 948ஏ தனி மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியயாளராக இருந்த கங்கை, போச்சம்பள்ளி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், சூளகிரி தாசில்தார் தேன்மொழி, அஞ்செட்டி தாசில்தாராகவும், ஓசூர் குளோபல் கால்சியம் லிட்., ஆய மேற்பார்வை அலுவலர் செந்தில்குமார், ஓசூர் அலகு 3 செட்டில்மென்ட் தனி தாசில்தாராகவும், அங்கு தனி தாசில்தாராக பணிபுரிந்த சின்னசாமி, கிருஷ்ணகிரி டாஸ்மாக் கிடங்கு துணை மேலாளராகவும், சூளகிரி சிப்காட் நிலை 4, அலகு 1ல் தனி தாசில்தாராக பணிபுரிந்த நிரஞ்சன்குமார், சூளகிரி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாரகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சூளகிரி

இதே போல் சூளகிரி தனி தாசில்தாரான (ச.பா.தி) மிருணாளினி, கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை தனி தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த ராமச்சந்திரன், கலெக்டர் அலுவலக மேலாளராகவும் (பொது), அங்கு பணிபுரிந்த சண்முகம், ஓசூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்து வந்த சரவணன்,

ஓசூர் குளோபல் கால்சியம் லிட். ஆய மேற்பார்வை அலுவலராகவும், கிருஷ்ணகிரி தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) தேசிய நெடுஞ்சாலை 844-ல் தனி தாசில்தாராக பணிபுரிந்து வந்த மகேஸ்வரி, ஓசூர் தேசிய நெடுஞ்சாலை 844 தனி தாசில்தாராக கூடுதல் பொறுப்பு ஏற்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்