19 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

வேலூர் மாவட்டத்தில் 19 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-07-27 16:07 GMT

வேலூர் மாவட்டத்தில் 19 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

தாசில்தார்கள் பணியிட மாற்றம்

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகள் மற்றும் தாலுகா அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் 19 தாசில்தார்கள் நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:-

வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக நேர்முக உதவியாளராக பணிபுரியும் சரவணன், வேலூர் வருவாய் கோட்ட அலுவலக நேர்முக உதவியாளராகவும், அங்கு நேர்முக உதவியாளராக பணிபுரிந்த ஹெலன்ராணி தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த மீரா பென்காந்தி அணைக்கட்டு தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த விஜயகுமார் குடியாத்தம் தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த லலிதா நில எடுப்பு மற்றும் மேலாண்மை பிரிவு தனி தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த நெடுமாறன் பேரணாம்பட்டு தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அங்கு பணிபுரிந்த வெங்கடேசன் நில எடுப்பு சிறப்பு பிரிவு தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த சித்ராதேவி வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தாசில்தாராகவும் (நிலஎடுப்பு), அங்கு பணிபுரிந்த கோபி வேலூர் தாலுகா அலுவலக கோட்ட கலால் அலுவலராகவும், நீதிபரிபாலன பயிற்சி பெறும் தாசில்தார் சுரேஷ்குமார் வேலூர் தனி தாசில்தாராகவும் (கோவில் நிலம்), அங்கு பணிபுரிந்த கீதா கே.வி.குப்பம் தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த சரண்யா வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக நேர்முக உதவியாளராகவும், வேலூர் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தாசில்தாராக பணிபுரிந்த பூமா வேலூர் தாலுகா குடிமை பொருள் தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

கலெக்டர் உத்தரவு

வேலூர் தாலுகா குடிமை பொருள் தாசில்தாராக பணிபுரிந்த சத்தியமூர்த்தி வேலூர் முத்திரை கட்டண தனி தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த பாலமுருகன் வேலூர் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி தாசில்தாராகவும், குடியாத்தம் வருவாய் கோட்ட அலுவலக நேர்முக உதவியாளர் ஜி.சரவணன் குடியாத்தம் ஆதிதிராவிடர் நல தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த கலைவாணி குடியாத்தம் வருவாய் கோட்ட அலுவலக நேர்முக உதவியாளராகவும், வேலூர் துணை ஆய்வுக்குழு அலுவலர் முருகன் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு (பெங்களூரு-சென்னை விரைவுப்பாதை திட்டம்) தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த சரவணமுத்து வேலூர் துணை ஆய்வுக்குழு அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பிறப்பித்துள்ளார். புதிய பணியிடத்தில் அனைத்து தாசில்தார்களும் உடனடியாக சேர வேண்டும். புதிய பணியிடத்தில் உடனடியாக சேரவில்லை என்றால் அரசு விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்