வருவாய் ஆய்வாளர்கள் 19 பேர் பணி இடமாற்றம்
தேனி மாவட்டத்தில் உள்ள 19 வருவாய் ஆய்வாளர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தேனி மாவட்டத்தில் உள்வட்ட வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் 19 பேர் பணி இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாக காரணங்களுக்காக இந்த பணி இடமாறுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கான உத்தரவை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி பிறப்பித்தார். அந்த உத்தரவில், இந்த 19 பேருக்கான பணி இட மாறுதல் உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும், இந்த மாறுதல் தொடர்பாக எவ்விதமான மறுப்போ, மேல்முறையீடோ, விடுப்பு விண்ணப்பமோ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.