தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு 'எண்ணும் எழுத்தும் பயிற்சி'

தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு ‘எண்ணும் எழுத்தும் பயிற்சி’

Update: 2022-10-14 10:27 GMT

சேவூர்

மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு கற்பிக்கும் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு, எண்ணும் எழுத்தும் 2-ம் பருவத்திற்கான பயிற்சியானது அக்டோபர் 10,11,12, ஆகிய தேதியில் 3 நாட்கள் சேவூர் கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளில் வழங்கப்பட்டது. 3 நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சியில் தமிழ், ஆங்கிலம், கணக்குப்பாடங்களைக்கற்பிக்கும் முறை குறித்து ஆசிரியர், கருத்தாளர்களால் சிறப்பாக விளக்கமளிக்கப்பட்டது. செயல்முறை விளக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட இப்பயிற்சியில் ஆசிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மாவட்ட ஆசிரியர், கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர், விரிவுரையாளர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர், ஆகியோர் மையத்தை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினர். வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களும் இப்பயிற்சியில் கலந்துகொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்