திருச்சி வந்த ரெயில்கள் திருவெறும்பூர், பொன்மலையில் நிறுத்தம்

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக திருச்சி வந்த ரெயில்கள் திருவெறும்பூர், பொன்மலையில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

Update: 2023-08-01 19:13 GMT

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக திருச்சி வந்த ரெயில்கள் திருவெறும்பூர், பொன்மலையில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

தண்டவாள பராமரிப்பு பணி

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் மதுரை மார்க்க தண்டவாளத்திலும், சென்னை மார்க்கத்தில் பொன்மலை பகுதியிலும் தண்டவாள பராமரிப்பு பணிகள் கடந்த 20-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் நிறைவடைய உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் தண்டவாள பராமரிப்பு பணிகளால் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வரும் ரெயில்களும், திருச்சியில் இருந்து செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில்களும் பலமணிநேரம் தாமதமாக வந்து செல்கின்றன. நேற்று முன்தினம் பாண்டியன், பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

பயணிகள் அவதி

இந்தநிலையில் நேற்று திருச்சி-ராமேசுவரம், திருச்சி-ஈரோடு, திருச்சி-தஞ்சை, தஞ்சை-மயிலாடுதுறை, மயிலாடுதுறை-விழுப்புரம், திருச்சி-காரைக்கால், திருச்சி-கரூர், கரூர்-திருச்சி உள்ளிட்ட 10 ரெயில்கள் இயக்கப்படவில்லை. இதேபோல் வேளாங்கண்ணியில் இருந்து நேற்று வாஸ்கோடகாமா செல்ல வேண்டிய ரெயிலும் ரத்து செய்யப்பட்டது.

நேற்று பகுதி தூரம் ரத்து செய்யப்பட்ட சென்னை மார்க்கத்தில் வந்த ரெயில்கள் பொன்மலை ரெயில் நிலையத்திலும், தஞ்சை, மயிலாடுதுறை மார்க்கத்தில் வந்த ரெயில்கள் திருவெறும்பூர் ரெயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கி விடப்பட்டனர். இவர்கள் அங்கிருந்து பஸ் பிடித்து திருச்சி நகருக்குள் வந்தனர். இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில்

இந்த நிலையில் திருச்சி பொன்மலை ெரயில் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 10.15 மணிக்கும், ஹவுரா எக்ஸ்பிரஸ் ெரயில் நேற்று மதியம் 1.30 மணிக்கும் புறப்பட்டு சென்றது. இதனைத் தொடர்ந்து மதுரையில் இருந்து சென்னை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ெரயில் திருச்சி பொன்மலை ெரயில் நிலையத்திலிருந்து மாலை 5 மணி அளவில் பயணிகளுடன் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது. 

Tags:    

மேலும் செய்திகள்